வடமாகாணசபை தொடர்பில் மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அனந்தி சசிதரனுக்கு வடமாகாணசபையில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் சிறப்புரிமையை மீறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. North Provincial Council Minister Anand Sasidharan Issue Tamil News
வடமாகாணசபையின் 130 ஆவது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அவை தலைவர் மேற்படி விடயம் தொடர்பாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,
வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு சென்று திரும்பிய மாகாணசபை உறுப்பினர் அமைச்சர் என கூறும், அனந்தி சசிதரன் கடந்த 25 ஆம் திகதி பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் வடமாகாணசபையில் நடந்த பல கூட்டங்களில் கூச்சல் குழப்பங்களாக இருந்ததாகவும், மக்களால் விமர்சிக்கப்படும் சபையாக வடமாகாணசபை மாறியுள்ளதாகவும், தற்போது சபை பொழுதுபோக்கு மற்றும் சண்டை பிடிப்பதற்கான சபையாக மாறியுள்ளதாகவும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள அமர்வுக்கும் தான் செல்ல விரும்பவில்லை. அமர்வுகளை நடத்தி நிதி வீண் விரயம் செய்யப்படுவதாகவும் அவை தலைவர் தான் நினைத்தால்போல் பிரேரணைகளை கொண்டுவருவதுடன், நாங்கள் பிரேரணை கொண்டுவந்தால் 15 நாட்களுக்கு முன்னர் கொண்டு வரவேண்டும். என கூறுவதாகவும் கூறியுள்ளார்.
இந்த செய்தியில் அனந்திசசிதரன் பாரதூரமான கருத்துக்களை கூறியுள்ளார். வெடுக்குநாறி மலையை யாத்திரிகர் தலமாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் வடமாகாணசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் 15 நாட்களுக்கு முன்னர் பிரேரணைகளை தரவேண்டும் என நான் எங்கும் கூறவில்லை. மேலும் 10 நாட்களுக்கு முன்னர் பிரேரணைகளை தரவேண்டும் என கூறப்பட்டுள்ள நிபந்தனையினையும் நான் அதிகம் கடைப்பிடிப்பதில்லை.
குறிப்பாக இனப்படுகொலை தீர்மானம் இந்த மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டது. அது அன்றைய சபை அமர்வு அன்று காலையே முதலமைச்சரால் எனக்கு கொடுக்கப்பட்டது.
எனவே அனந்தி சசிதரன் சபையின் சிறப்புரிமையை மீறும் வகையில் பேசியுள்ளார். அதற்கான இந்த சபை கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது என அவைத்தலைவர் கூறினார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- யுத்தத்தில் அங்கவீனமடைந்த பிரிகேடியர்களுக்கு பதவி உயர்வு
- சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்
- மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு
- மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்
- அய்ஸ் போதைப் பொருளுடன் நபரொருவர் கைது
- ‘தமிழனே விழித்திடு மகாவலியை எதிர்த்திடு’; முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்
- தேசிய அடையாள அட்டைகள் கட்டணத்தில் திருத்தம்
- கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் தடம்புரண்டதில் இளைஞன் பலி
- மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது: மர்ம நபர்களினால் தாக்கப்பட்ட பூங்காவின் அதிகாரிகள்!
- கலஹா வைத்தியசாலையில் பதற்றம்; குழந்தை உயிரிழந்த சம்பவம்
- நானுஓயா டெஸ்போட் பகுதியில் தீ: கடை முற்றாக எரிந்து சாம்பல்