அபிவிருத்தி செயலணி கூட்டத்தை புறக்கணித்த விக்கி! இது தான் காரணமாம்!

0
429
North Chief Minister Vigneswaran Refuses North Development Meeting

கொழும்பில் நேற்று நடைபெற்ற வடக்கு, கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கான செயலணியின் கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை. North Chief Minister Vigneswaran Refuses North Development Meeting Tamil News

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் செயலணியின் உறுப்பினர்களில் ஒருவராக சி.வி.விக்னேஸ்வரனின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இது குறித்து கருத்து கூறிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பான அமைக்கப்பட்ட இந்த செயலணியில் வடக்கு மாகாணத்தில் முதலமைச்சர் உள்ளிட்ட இரண்டு பேர் மாத்திரமே இடம்பெற்றுள்ளனர்.

பெரும்பாலும் அமைச்சர்கள், அதிகாரிகள், படை அதிகாரிகளே இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்

தாம் இந்த விடயம் தொடர்பாக சிறிலங்கா அதிபருக்கு இரண்டு கடிதங்களை அனுப்பியிருந்ததாகவும் எனினும் அதற்குப் பதிலளிக்கப்படவில்லை என்றும் வட மாகாண முதமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites