எந்தவொரு துறைமுகமும் வெளிநாட்டுக்கு சொந்தமல்ல! மகிந்த சமரசிங்க தெரிவிப்பு!

0
715

எந்தவொரு துறைமுகத்தையும், எந்தவொரு வெளிநாட்டுக்கும் விற்கும் அல்லது கைமாற்றம் செய்யும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்று துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். No Harbour Control Under Foreign Authority Mahinda Samarasinghe Said Tamil News

”இலங்கையில் உள்ள அனைத்து துறைமுகங்களும், துறைமுக அதிகார சபைக்கே சொந்தம்.

சில துறைமுகங்கள் வெளிநாட்டு முதலீடுகளுடன் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

அதுபோல, திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கும் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது,

இதன் அர்த்தம், துறைமுகத்தை வெளிநாட்டுக்கு வழங்குவது அல்ல.

ஆனால் முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம், துறைமுகங்களை ஏனைய நாடுகளுக்கு வழங்க இணங்கியிருந்தது.

ஆனால் தற்போதைய அரசாங்கம் அதனைச் செய்யாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites