நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் சித்ரா பௌர்ணமி பூஜைகள் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
சித்ராபௌர்ணமி பூஜைக்கு முன்பாக பாம்பு புற்றிலிருந்து சுயமாக முளைத்த சிவலிங்கத்திற்கு பூ சொரியும் நிகழ்வு நடைபெற்றது இதற்கு வழமையை விட பக்தர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது.
பூஜையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, கல்முனை மாநகர பிரதி மேயர் காத்தமுத்துகணேஸ், காரைதீவு பிரதேசசபைபயின் தவிசாளர் கி.ஜெயசிறில், சம்மாந்துறை பிரதேசசபையின் பிரதி தவிசாளர் வி.ஜெயச்சந்திரன், காரைதீவு பிரதேசசபை உறுப்பினர்களான பி.மோகனதாஸ் மு.காண்டீபன் சி.ஜெயராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அம்பாறை மாவட்ட ஆலயங்களில் சிறப்புப்பூஜைகள் நடைபெற்று சித்திரகுப்தனாரின் சரிதம் பாடப்பட்டு சித்திரைக் கஞ்சியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகைத்தந்திருந்தனர்.
More Time Tamil News Today
- முஸ்லிம் ஆசிரியையின் சர்ச்சை; அதிரடி முடிவு
- ரவிக்கு தலைவர் பதவி, வெளியேறினார் ஜோசப்
- களியாட்ட விடுதிகளுக்கு தடை : அரசாங்கம் அறிவிப்பு
- மக்களே அவதானமாக இருங்கள்….!
- மே 1 ஆம் திகதியா அல்லது 7 ஆம் திகதியா விடுமுறை? : அறிவித்தார் தொழில் ஆணையாளர்
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags: nintavur mattupalli Madaththadi Meenadchi Amman kovil, nintavur mattupalli Madaththadi Meenadchi Amman kovil