நைஷ் அணியின் பயிற்றுவிப்பாளராக பெட்ரிக் வீரியா

0
585
Nice manager patrick vieira news Tamil

பிரென்ச் லீக் 1 அணியான நைஷ் அணியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் அர்செனல் அணியின் தலைவர் பெட்ரிக் வீரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் மென்செஸ்டர் சிட்டி, ஜுவான்டஸ் மற்றும் ஏசி மிலன் அணிகளின் மத்தியக்கள வீரரான இவர், நியூவ் யோர்க் சிட்டி அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டார்.

அதுமாத்திரமின்றி அர்செனல் அணியின் பயிற்றுவிப்பாளரான அர்சென் வெங்கருக்கு பதிலாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், உனய் எம்ரி பின்னர் அர்செனல் அணியுடன் இணைந்தார்.

நியூவ் யோர்க் சிட்டி அணியிலிருந்து வெளியேறுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள பெட்ரிக் வீரியா,

“நியூவ் யோர்க் சிட்டி அணியிலிருந்து விலகுவது மிகவும் கடினமான விடயம். எனக்கு மாத்திரமின்றி எனது குடும்பத்தாருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

நைஷ் நடைபெற்று முடிந்த பிரென்ச் லீக் 1 தொடரின் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தை பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>

Nice manager patrick vieira news Tamil,Nice manager patrick vieira news Tamil