ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட மூவர் குழு நவம்பர் 30 ஆம் திகதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. (NGT order Sterlite panel file report November)
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்துவரும் தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வுசெய்து அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டது.
தமிழக அரசு கூறுவது போன்று ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு உள்ளதா? இல்லையா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.
இந்தக் குழு ஆலையை ஆய்வு செய்து, பொது மக்களிடம் கருத்துக்களையும் கேட்டறிந்தது. வாய்மொழியாகவும், எழுத்து மூலமாகவும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஆய்வுக் குழுவுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் எதிர்வரும் 30 ஆம் திகதியுடன், முடிவடையும் நிலையில், ”ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும்” என சிறப்புக்குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்த போது, ஸ்டெர்லைட் ஆய்வுக் குழுவிற்கு நவம்பர் 30 ஆம் திகதி வரை அவகாசம் அளித்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
நவம்பர் 30 ஆம் திகதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் வழக்கை நவம்பர் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ் நாடு மூன்றாவது இடம்
- பெற்ரோல், டீசல் விலை தொடர்பில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்
- பாடகி சின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்; வைரமுத்து
- அப்துல் கலாம் பிறந்த நாள்; பேக்ரும்பு மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்காரம்
- இளம் பெண் மீது அசிட் வீச்சு தாக்குதல்; சந்தேக நபர் தலைமறைவு
- பிரதமர் மோடி ஒடிசாவின் புரி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல்
- பாலியல் குற்றச்சாட்டு; பெண் பத்திரிகையாளர் மீது மானநஷ்ட வழக்கு
- ஆட்டோவும், சுற்றுலா வேனும் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; NGT order Sterlite panel file report November