அஞ்சலக சேவை வழமைக்கு திரும்ப கால அவகாசம் தேவை

0
478
nee two days post service post department notice Tamil news

அஞ்சலக ஊழியரகள் பணிப்பறக்கணிப்பினை கைவிட்டுள்ள போதிலும் அங்சல் பணிகள் வழமைக்கு திரும்புவதற்கு இரண்டு தினங்கள் வரை கால அவகாசம் தேவைப்படும் என தபால் தலைமையகம் அறிவித்துள்ளது. nee two days post service post department notice Tamil news

அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தபால் சேவைகள், மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் உட்பட ஏனைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

வழங்கப்பட்ட வாக்குறுதிகளையடுத்தே பணிப்புறக்கணிப்பை கைவிடத் தீர்மானித்ததாக அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

எனினும்;, அமைச்சர் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாது விடத்து எதிர்வரும் 7ஆம் திகதியிலிருந்து மீண்டும் பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முடங்கியிருந்;த தபால் சேவையினை வழமைக்கு கொண்டு வர மேலும் இரண்டு தினங்கள் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

tags :- nee two days post service post department notice Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites