கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விடயம் சோகத்தை உருவாக்கியுள்ளது.
ஒன்ராறியோவிலுள்ள Kitchener நகரத்தைச் சேர்ந்த Jaqueline McDermott (22) என்ற அழகிய இளம்பெண் இம்மாதம், அதாவது அக்டோபர் 1ஆம் திகதி மாயமானார்.

தியான வகுப்பு ஒன்றிற்கு சென்று விட்டு திரும்பிய Jaqueline திடீரென மாயமான நிலையில், அவர் சென்ற கார் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்தக் காரில் அவர் இல்லை!
அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் கொலம்பியாவில் Jaquelineஐத் தேடும் முயற்சியில் அவரது பெற்றோரும் இணைந்துகொண்டார்கள்.
ஆனால், தற்போது Jaquelineஇன் குடும்ப நண்பரான Katharine Kitsemetry என்னும் பெண் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், Jaquelineஉடைய உயிரற்ற உடல் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசார் இந்த விடயம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
