கனடாவில் 15 வயது உடைய சிறுவன் ஒருவனுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கனடாவின் வோகன் பகுதியில் பெண் ஒருவரை படுகொலை செய்ததாக குறித்த சிறுவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காமினோ மற்றும் ரதர்புர்ட் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து கொண்ட கொண்ட போலீசார் குறித்த இடத்திற்கு சென்றபோது பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிடந்ததாகவும் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்து விட்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 15 வயதான சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர். கொலையுண்ட பெண்ணுக்கும் சிறுவனுக்கும் எவ்வாறான தொடர்பு இருந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு போலீசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.