முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அவரது ஆட்சி காலத்தில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து 27.5 மில்லியன் ரூபாய் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுதாரபுரம் எப்பாவல கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
2017ஆம் ஆண்டு தமது சங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் மண்டபம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக ஜனாதிபதி நிதியில் இந்த நிதி ஒதுக்கப்பட்டபோதும் இன்றுவரை அந்த திட்டம் முழுமை பெறவில்லை என்று அவர் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.