திருமலையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

0
48

இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் முகமாக திருகோணமலையில் (Trincomalee) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு இன்றைய தினம் (15.05.2025) திருகோணமலை – 3ம் கட்டை சந்தியில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் இளையோர் ஒன்றிணைந்து இறுதி யுத்தத்தின் போது பொதுமக்கள் உணவாக உற்கொண்ட உப்புக் கஞ்சியை நினைவுபடுத்தும் வகையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்டத் தலைவர் “இலங்கை அரசானது தமிழ் மக்கள் மீது முன்னெடுத்த அநீதியை அடுத்த சமூகத்திற்கு கடத்துவது அவசியமான ஒன்றாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 

மேலும் திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த ஒரு தமிழ் பிரதியமைச்சர் இனப்படுகொலை குறித்து இதுவரை கருத்து வெளியிடாமல் இருப்பது கவலையளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.