இன்று தனது பதவியினை தூக்கி எறியும் எம்.பி!

0
456

தம்மிக்க பெரேரா இன்று தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

அதன்பின்னர், ஜூன் 24ஆம் திகதி முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராகப் பதவியேற்ற அவர், கடந்த 10ஆம் திகதி அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்தார்.

எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் தம்மிக்க பெரேராவும் வாக்களித்திருந்தார்.

இந்தநிலையில் அவர் தனது பதவியினை துறக்கவுள்ளமைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.