சிறுவர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் இணைப்பு உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார். mp thilagar response vijayakala maheswaran statement
பெருந்தோட்ட பகுதி சிறுவர்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் சத்துணவுத்திட்டமான ‘ நியுட்ரிபார்’ உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, விஜயகலா மகேஸ்வரன் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தலை தூக்காமல் இருப்பதற்கு, விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து தற்போது நாடுபூராகவும் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினர்களும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.திலகராஜ் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில்,
“விடுதலைப்புலிகள் காலத்தில் கோரிக்கைகள் எதுவானபோதும் அப்போது வன்முறை கலாசாரம் ஒன்றே வடக்கில் இருந்தது. அப்போது சிறுவர்களாக இருந்தவர்களே இன்று இளைஞர்களாகி வன்முறையில் ஈடுபடுகின்றனர். காரணம் அவர்கள் வன்முறை சூழலிலேயே பிறந்து வளர்ந்தவர்களாக உள்ளனர். நேற்றைய சிறுவர்களே இன்றைய இளைஞர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். எனவே இப்போதைய வன்முறையைத் தடுக்க முன்னைய வன்முறை கலாசாரமே தீர்வாகாது.
இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என்பது போலவே நேற்றைய சிறுவர்களே இன்றைய இளைஞர்கள் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும். இன்று தவறும் செய்யும் இளைஞர்கள் நேற்று சிறுவர்களாக இருந்தபோது எந்தச் சூழலில் வளர்ந்தார்களோ அதுவே அவர்கள் இளைஞர்களாகும்போது அவர்களின் நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. முன்னையதாக வன்முறை கலாசார சூழலில் வளர்ந்தவர்கள் மீண்டும் வன்முறைக கலாசாரத்தைக் கொண்டே அடக்க வேண்டும் என்ற ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கூற்று ஏற்புடையது அல்ல. வன்முறையைத் தடுக்க வன்முறை கலாசாரமே தீர்வாகாது. விடுதலைப் புலிகள் காலத்தில் வன்முறை கலாசாரம் வளர்த்தெடுக்கப்பட்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
அமைச்சரது ஆதங்க கருத்து தெற்கில் அரசியல் இலாப நோக்கில் பயன்படுத்தப்படுகின்றது. ஹிட்லர் போன்று செயற்பட்டு நாட்டை வளர்க்கவேண்டும் என சொன்னார்கள். அவர்களுக்கு விஜயகலாவை விமர்சிக்கும் தார்மீகம் இல்லை. வடக்கிலோ தெற்கிலோ வன்முறை மூலம் எதிர்காலத்தை அமைக்க நினைக்கும் எவரது கருத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வர்த்தகரைக் கட்டிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை; பத்தரமுல்லையில் சம்பவம்
- யாழில் மனதை உருக்கும் சம்பவம்; பட்டதாரி இளைஞன் தற்கொலை
- எமனாக மாறிய றம்புட்டான்; ஆறு வயது சிறுவன் பலி
- நாவற்குழியில் பெண்ணொருவர் தற்கொலை
- 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 25 வயது இளைஞன் கைது
- மஹிந்த 100 கோடி தருவதாகக் கூறினார்; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய விஜயகலா
- நன் ஸ்டிக் பாத்திரத்தால் புற்றுநோயா? ஆபத்தின் விளிம்பில் மக்கள்
- மகிந்தவின் தேவைக்காக விஜயகலா புலியை அழைத்திருக்கலாம்; ஐதேக
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
mp thilagar response vijayakala maheswaran statement, mp thilagar response vijayakala maheswaran statement