விகாரைக்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி தாய், சேய் பலி

0
1374
mother daughter die motorcycle accident

(mother daughter die motorcycle accident)
பொலநறுவை அரலங்கவில பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் மற்றும் இரண்டரை வயது குழந்தையும் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் விகாரைக்குச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்தனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.

தாய், தந்தை, மகள் மற்றும் பாட்டி ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிளே விபத்துக்குள்ளாகிய நிலையில், விபத்தில் 24 வயதான தாயும், இரண்டரை வயதான குழந்தையுமே உயிரிழந்துள்ளனர்.

இதன்போது, காயமடைந்த தந்தை மற்றும் பாட்டியும் தற்போது பொலநறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags; mother daughter die motorcycle accident