காணாமல் போன சிறுமிகள்; தாய் மீது சந்தேகிக்கும் பொலிஸார்

0
339

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் கெலவ்னா பகுதியில் இரண்டு சிறுமிகளை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அம்பர் எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது 8 வயதான அவுரா பால்டன் மற்றும் 10 வயதான ஜஸ்வா கோல்டன் ஆகிய இரண்டு சிறுமிகளை காணவில்லை என  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாயுடன் கெலவ்னா பகுதிக்கு பயணம் செய்த இருவரும் இரண்டு சிறுமிகளும் காணவில்லை என அவர்களது தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் சர்ரே போலஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு பின்னர் இந்த பிள்ளைகளையும் தாயையும் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 30 ஆம் திகதி கெலவ்னா பகுதியில் உள்ள உணவு விடுதியொன்றில் இறுதியாக இவர்களை கண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழந்தைகளை  அவர்களது தாயார் கடத்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குழந்தைகளின் தாய் உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர் எனவும் பிள்ளைகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த குழந்தைகளை கண்டால் அது குறித்து அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.