military music show attracted viewers coonoor
நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் துவங்கிய பழ கண்காட்சியில், ஒரு டன் எடை கொண்ட திராட்சைகளை கொண்ட யானை உருவம், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
மேலும் தங்கமீன், மயில், கரடி உள்ளிட்ட உருவங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து ராணுவ வீரர்களின் பேக் பைப்பர், பேண்ட் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
குன்னூர் பழக்கண்காட்சியில், ராணுவ பேண்ட் இசைக்கப்பட்டது, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ்பூங்காவில் பழக்கண்காட்சியில் ஒரு டன் அளவிலான திராட்சையால் யானை உருவம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
மேலும், 4 தோட்டக்கலை துறை சார்பாக, அரங்குகளில், தங்கமீன், மயில், இரட்டை மீன், கரடி ஆகியவை அன்னாசி, வாழை, மாம்பழம் உள்ளிட்ட பழங்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது, அனைவரையும் கவர்ந்து வருகிறது.
இதுமட்டுமின்றி, நீலகிரியின் அரிய வகை பழங்களும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் காலை முதல் தங்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்தும், செல்பிஎடுத்தும் பூங்காவில் வலம் வந்தனர்.
இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில், குன்னூர் ராணுவ வீரர்கள் இசைத்த ராணுவ பேண்ட் வெகுவாக கவர்ந்தது. மேலும், ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட, ராணுவ வீரர்கள் இசைத்த பேக் பைப்பர், இசையை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.
More Tamil News
- ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் – கடம்பூர் ராஜூ!
- நாளை தூத்துக்குடி செல்கிறார் துணை முதல்வர் – ஓ.பி.எஸ்!
- ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 2.5 கோடி மதிப்பிலான தங்க வாள் காணிக்கை!
- ஸ்மார்ட் சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி!
- முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கான விடுதி திறப்பு!