துவிச்சக்கரவண்டியில் பயணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்

0
287

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் துவிச்சக்கரவண்டியில் தனது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்.

எரிபொருளை சிக்கனப்படுத்தல்

தற்பொழுது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமையினால் எரிபொருளை சிக்கனப்படுத்தும் முகமாக தான் துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்வதாக தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகனங்களிலும் மோட்டார் வண்டிகளிலும் பயணம் செய்யும் நிலையில் செல்வராசா கஜேந்திரன் துவிச்சக்கரவண்டியில் தனது அன்றாட செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.