ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி அபுதாபியில் இன்று இரவு 08 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்தவுள்ளன.
இதனிடையே, ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 93 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய நான்காவது போட்டியில் பாகிஸ்தான், மற்றும் ஓமான் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் Mohammad Haris 66 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
தொடர்ந்து 161 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய ஓமான் அணி 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 67 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
அணி சார்பில் Hammad Mirza 22 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் Saim Ayub, Sufiyan Muqeem மற்றும் Faheem Ashraf ஆகியோர் தலா 02 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.