பாரிய தொழிற்சங்க நடவடிக்கை; கல்வித்துறை தொழிற்சங்கங்கள் தீர்மானங்கள்

0
457
Massive union action Educational Institutions Decisions

(Massive union action Educational Institutions Decisions)
அரசியல் பழிவாங்கல்களுக்கு சலுகைகள் எனக் கூறி, தகுதியற்ற நபர்களுக்கு கல்வி நிர்வாக சேவையில் பதவிகளை வழங்குவதை நிறுத்தாவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு கல்வித்துறையின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இந்தப் பதவிகள் வழங்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, கல்வி நிர்வாக சேவையின் தொழிற்சங்கம் இன்று சுகயீன விடுமுறையின் கீழ் சேவைக்கு சமூகமளிக்காது, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இதன்பின்னர் ஆசிரியர்களின் கல்விச் சங்கம், ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்களும் இணைந்து கல்வி நிர்வாக சேவையுடன் ஒன்றிணைய உள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்ப்பாக அனைத்து தொழிற் சங்கங்களுடன் கலந்தாலோசித்து கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு கல்வி அமைச்சின் பரீட்சை திணைக்களம், அதேபோன்று மாகாண கல்வி சேவையின் கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களும் இணைவதாக கல்வி நிர்வாக சேவை தொழிற் சங்கத்தின் தலைவர் பிரபாத் விதான குறிப்பிட்டார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Massive union action Educational Institutions Decisions