ஐரோப்பிய நாடான இத்தாலியை நேற்று கடுமையான புயல் தாக்கியதினால் அங்கு பலத்த காற்றுடன், கடும் மழையும் பெய்துள்ளது. Massive flooding Venice Italy
காற்றில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. தலைநகர் ரோமில் கார்மீது மரங்கள் விழுந்ததில், அதில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
சவோனோ என்ற இடத்தில் பறந்து வந்த மரக்கட்டை தாக்கியதில் ஒரு மூதாட்டி உயிரிழந்தார். மேலும் 2 பேர் இறந்தனர். புயல் மழைக்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர்.
புயல் காரணமாக வெனிஸ் நகரில் பலத்த மழை கொட்டியது. இதனால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தில் 156 செ.மீட்டர் (61 இஞ்ச்) உயரத்துக்கு மழை வெள்ளம் தேங்கி இருக்கிறது.
இதே போன்று வெனிஸ் நகரம் முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது. வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எனவே மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறி வருகின்றனர். குழந்தைகள்மற்றும் பொருட்களை தோளில் சுமந்தபடி பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர்.
வெனிஸ் நகரில் தற்போது வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 1966-ம் ஆண்டு பெய்த மழையில் 150 செ.மீ. அளவு தண்ணீர் தேங்கியது. தற்போது 194 செ.மீட்டர் தண்ணீர் தேங்கியிருக்கிறது.
மழை காரணமாக ஜெனோவா, ரோம், வெனீடோ, வெனிஸ், மெஸ்சினாவில் உள்ள சிலியான் துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
tags :- Massive flooding Venice Italy
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- பாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு
- அரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்
- இந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்
- காற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு
- நியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு
- இந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை
- பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை
- முச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்!!
எமது ஏனைய தளங்கள்