{ Marudapandy Rameswaran appointed Chief Minister }
மத்திய மாகாண பதில் முதலமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ,ஆளுநர் பி.பீ. திசாநாயக்க முன்னிலையில் இன்று அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
மத்திய மாகாண தமிழ் கல்வி, தோட்ட உட்கட்டமைப்பு, விவசாய, மீன்பிடி, இந்து கலாசார அமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் செயற்படுகின்றார்.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க அமெரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Tags: Marudapandy Rameswaran appointed Chief Minister
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!
- கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்!
- அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் உண்ணாவிரத போராட்டம்
- தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு – மல்லாகத்தில் சோகம்!
- விசேட பயிற்சிக்காக ஸ்கொட்லாந்து செல்லும் பொலிஸ் மா அதிபர்
- உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது – யாழ். மாநகர மேயர்!!