37 நாட்களுக்குள் நான்கு முறை திருமணம்; அடுத்த நாளே விவாகரத்து! வங்கி ஊழியர் செய்த செயல்!

0
78

ஊதியத்துடன் விடுமுறை பெற 37 நாட்களுக்குள் நான்கு முறை திருமணம் செய்த நபர் தைவானில் ஒரு நபர் 37 நாட்களுக்குள் ஒரே பெண்ணை நான்கு முறை திருமணம் செய்து மூன்று முறை விவாகரத்து செய்த சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் நோக்கம், தொழிலாளர் சட்டத்தில் உள்ள ஒரு ஓட்டையை பயன்படுத்தி 32 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பெறுவதுதான். இந்த சம்பவம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து சீர்திருத்தக் கோரிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளது.

தைவான் வங்கி ஊழியர் ஒருவர் அந்நாட்டு சட்டப்படி ஒவ்வொரு திருமணத்திற்கும் எட்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதை பயன்படுத்திக் கொண்டார்.

முதல் திருமணம் முடிந்ததும், விடுமுறையை எடுத்துக்கொண்டு அடுத்த நாளே விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் திருமணம் செய்தார்.

இந்தச் சுழற்சி தொடர்ந்ததால் அவருக்கு மொத்தம் 32 நாட்கள் விடுமுறை கிடைத்தது. வங்கி இதை எதிர்த்து விடுமுறை மறுத்தாலும் ஊழியர் தைபே நகர தொழிலாளர் பணியகத்தில் புகார் அளித்தார்.

பணியகம் ஊழியருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து வங்கிக்கு ₹50,000 அபராதம் விதித்தது. அதேவெளை ஊழியரின் செயல் நெறிமுறையற்றது என்றாலும் சட்டப்படி சரியானது என பணியகம் உறுதி செய்தது.