மன்னார் அகழ்வுப் பணிகள்; தொடரும் மர்மம்

0
781
Mannar Excavations mystery resumes

மன்னார் சதொச வளாகத்தில் இன்று 71 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது. (Mannar Excavations mystery resumes)

இதுவரை 126 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 120 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற கட்டடத் தொகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் ரி. சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச மற்றும் களனி பல்கலைகழக போராசிரியர் தலைமையில் மன்னார் ‘சதொச’ வளாகத்தில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற அகழ்வு பணியின் போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம்? என சந்தேகத்தை ஏற்படுத்தகூடிய மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கைகள் இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட நிலையிலும் கால்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று குறுக்காக பிணைக்கப்பட்ட விதத்திலும் மிகவும் நெருக்கத்துக்குள் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.

குறித்த மனித எலும்புக்கூடு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டதா? அல்லது மத சடங்குகளின் அடிப்படையில் புதைக்கப்பட்டதா? என்பது தொடர்பாக எந்தவித ஊகிப்புக்களும் தற்போது மேற்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினமும் குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Mannar Excavations mystery resumes