இரட்டை பெண் குழந்தைகளை பெற்ற தந்தையே விற்ற அவலம்

0
763
Man arrested selling twomonthold twin daughters India Tamil News

மேற்குவங்கத்தில் பெற்ற 2 மாத இரட்டை பெண் குழந்தைகளை தந்தை விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (Man arrested selling twomonthold twin daughters India Tamil News)

மேற்கு வங்க மாநிலம் பர்கானாஸ் மாவட்டம் பரசாத் நகரம் அருகே உள்ள பஹதுரியா என்ற கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் 38 வயதுடைய ரத்தன் பிரம்மா என்பவர் தனது குடும்பத்தில் ஏற்பட்ட பணக் கஷ்டம் காரணமாக தான் பெற்ற குழந்தைகளை விற்றுவிட முடிவு செய்துள்ளார்.

அதற்காக தாக்கூர் நகர் பகுதியிலுள்ள அரிசி வியாபாரி ஒருவருக்கும், ராமச்சந்தூர்பூர் கிராமத்தில் வசிக்கும் ஒரு தம்பதிக்கும் தங்கள் இரு மகள்களையும் ஒரு இலட்சத்திற்கும், 80 ஆயிரம் ரூபாவிற்கு விற்றுள்ளார்.

ரத்தன் பிரம்மாவுக்கு ஏற்கனவே 10 வயதில் பெண் குழந்தையொன்று உள்ளது. பொலிஸாருக்கு இந்த தகவல் தெரியவர இது தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார் ரத்தன் பிரம்மா தனது குழந்தைகளை விற்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

குழந்தைகள் இருவரும் மீட்கப்பட்டு சந்த்பாரா சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். வைத்தியர்களின் பரிசோதனைக்கு பின்னர் குழந்தைகள் இருவரும் அரசு குழந்தைகள் நல மைத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தன் மகள்களை, பெற்ற தந்தையே விற்ற அவலம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

டெல்லியில் தண்டவாளத்தில் மதுவருந்திய மூவர் புகையிரதம் மோதி பலி

மேக் இன் இந்தியா திட்டம் உலக அளவில் மாறியுள்ளது; நரேந்திர மோடி

நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி ஏமாற்றிவிட்டார் ; மல்லிகார்ஜுன கார்கே

தமிழ் நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

மகிந்த ராஜபக்ச சர்வதேச குற்றவாளி; அமைச்சர் ஜெயக்குமார்

சபரிமலை கலவரத்தில் ஈடுபட்ட 3505 பேர் கைது

Tamil News Group websites

Tags; Man arrested selling twomonthold twin daughters India Tamil News