மெட்ரிட் ஓபன் இரண்டாவது சுற்றில் நடாலுக்கு இலகு வெற்றி!

0
745
Madrid Open 2018 rafael nadal news Tamil

(Madrid Open 2018 rafael nadal news Tamil)

ஸ்பெயினில் நடைபெற்று வரும் மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் இண்டாவது சுற்றில் ஸ்பெயினின் முன்னணி டென்னிஸ் வீரர் ரபேல் நடால் வெற்றிபெற்றுள்ளார்.

மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடர் ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டியின் இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் வீரர் கெயல் மொன்பில்ஸை எதிர்கொண் நடால் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றுள்ளார்.

தரப்படுத்தலில் முதல் நிலையில் இருக்கும் நடால், இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முதல் செட்டை 6-3 என கைப்பற்றிய நடால், இரண்டாவது செட்டை 6-1 என கைப்பற்றி வெற்றிபெற்றார்.

நடால் அடுத்த சுற்றில் ஆர்ஜன்டீன வீரர் டியாகோ ஸ்கோவ்ட்ஸ்மனை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>