Home Sports மெட்ரிட் ஓபன் : காலிறுதிக்கு முன்னேறினார் கசட்கினா!

மெட்ரிட் ஓபன் : காலிறுதிக்கு முன்னேறினார் கசட்கினா!

0
மெட்ரிட் ஓபன் :  காலிறுதிக்கு முன்னேறினார் கசட்கினா!

(Madrid Open 2018 daria kasatkina news Tamil)

மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு ரஷ்ய வீராங்கனை டரியா கசட்கினா தகுதிபெற்றுள்ளார்.

இன்று நடைபெற்ற மூன்றாவது சுற்றுப்போட்டியில் கசட்கினா, ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஷாவை எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் அபாரமாக ஆடிய கசட்கினா 2-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

முதல் செட்டில் ஆதிக்கத்தை செலுத்திய கசட்கினா 6-2 என முதல் செட்டை கைப்பற்றினார். எனினும் அடுத்த செட்டில் சிறப்பாக ஆடிய முகுருஷா 6-4 இரண்டாவது செட்டை கைப்பற்றி போட்டியை சமப்படுத்தினார்.

எவ்வாறாயினும் இறுதி செட்டில் ஆதிக்கம் செலுத்திய கசட்கினா 6-3 என கைப்பற்றி காலிறுதிக்கு தகுதிபெற்றார்.

<<Tamil News Group websites>>