சமாதானத்தை ஏற்படுத்த உயிரை தியாகம் செய்த அவுஸ்திரேலியர்கள்- மக்ரோன்!

3
1051
Macron pays tribute Australian soldiers

அவுஸ்ரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், உலகப் போர்களின் போது பிரான்ஸில் போராடி மடிந்த வீரர்களை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டார்.Macron pays tribute Australian soldiers

சிட்னி ஹைட் பார்க்கில் அமைக்கப்பட்டுள்ள அவுஸ்ரேலிய மற்றும் நியூசிலாந்து இராணுவ வீரர்களுக்கான நினைவகத்தில் மே 2 (புதன்கிழமை) அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அவுஸ்ரேலியாவிற்கும், பிரான்ஸிற்கும் இடையிலான உறவை பலப்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் ஜனாதிபதி நேற்று (மே 1) அவுஸ்ரேலியாவிற்கு விஜயம் செய்தார்.

இவ் விஜயத்தின்போது மக்ரோன், அவுஸ்ரேலியாவின் ஆளுநர் ஜெனரல் பீட்டர் கொஸ்க்ரோவை சந்திக்கவுள்ளதுடன், அவுஸ்ரேலிய பிரதமருடன் பாதுகாப்பு, ஒத்துழைப்பு உள்ளிட்ட பல கருத்துக்கள் பற்றி கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து தெரிவித்த அவுஸ்ரேலிய பிரதமர், ”பல அவுஸ்ரேலிய குடிமகன்கள் பிரான்ஸில் உயிர்நீத்துள்ளனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் அங்கு போராடிய நிலையில், அவர்களுள் 46 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுள் 11 ஆயிரம் பேர்களது பெயர்கள் அவுஸ்ரேலிய தேசிய நினைவுசின்னத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

அதன் பின் உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி, ”உலகளாவிய ரீதியில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக இவர்கள் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர்.

இதேவேளை, போர்க்களத்தில் அனைவருடன் கைக்கோர்த்து போராடிய சுமார் 500 பழங்குடி அவுஸ்ரேலியர்களை இத்தருணத்தில் நினைவுகூற கடமைப்பட்டுள்ளேன். அந்தவகையில், இந்நாட்டிற்கு நாம் எவ்வளவு கடன்பட்டுள்ளோம் என்பது எமக்கு தெரியும்” எனத் தெரிவித்தார்.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**