கிளிநொச்சி அம்பாள் குளத்தில் சிறுத்தையொன்றை அடித்துக் கொலை செய்தவர்களைக் கைது செய்யவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (Leopard killed kilinochchi Wildlife Department Response Action)
அம்பாள்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மக்கள் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை பொதுமக்களை அச்சுறுத்தியது.
இந்த நிலையில் குறித்த இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் குறித்த சிறுத்தை பிடிக்க முயற்சிகள் செய்த போதும் அது பலனளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் ஒருவர் உட்பட 10 பேரைச் சிறுத்தை மீண்டும் தாக்கியுள்ளது. அவ்விடத்தை விட்டு வனஜீவராசிகள் வெளியேறியதும் அப்பகுதியிலுள்ள இளைஞர்கள் சிறுத்தை மிகவும் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியில் சிறுத்தை கொன்றவர்களின் கொடூரமான செயல் வெளிப்பட்டது.
இந்;தச் சம்பவம் பலர் மத்தியில் விரக்தி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
இதேவேளை, மக்களால் தாக்கப்பட்டு மனிதத் தன்மையற்ற விதமாக கொலை செய்யப்பட்ட சிறுத்தை மிகவும் பாதுகாக்கப்பட்ட விலங்கினம் என்றும் இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்கள் அனைவரையும் பிடியாணை இல்லாது கைது செய்வதற்கு சட்டத்தில் விதிமுறைகள் உண்டு என்றும் சுற்றுச்சூழல் வழக்கறிஞர் ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.
விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு சட்டத்தின் 30 ஆவது பகுதியின் கீழ் இந்த விலங்கு பாலூட்டி எனவும் இவ்வாறான மிருகங்களை கொலை செய்வது, தாக்குவது, காயப்படுத்தல், துன்புறுத்துவது மற்றும் இவ்வாறான மிருகங்களின் பாகங்கள் வைத்திருப்பது மற்றும் காயப்படுத்தல் ஆகிய குற்றங்கள் பிணை கொடுக்க முடியாத குற்றங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விலங்குகள் துஷ்பிரயோகம் தடுப்பு ஆணையின் படி, அவர்களுக்கு தண்டனை வழங்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் கூட்டம் ஒன்று இந்த சம்பவத்திற்கு தொடர்புள்ளதால் தண்டனைக்குரிய குறியீட்டின் 32 ஆவது பிரிவின்படி இவர்கள் அனைவருக்கும் வழக்கு பதிவு செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த கொலையுடன் தொடர்புடைய அனைவரையும் மேலுள்ள மூன்று சட்ட விதிகளுக்கமைய கைது செய்யப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விலங்குகள் மற்றும் தாவரங்கள் சட்டத்தின் கீழ் இவ்வாறான குற்றத்திற்கு 30,000 ரூபாவுக்கு குறையாத மற்றும் ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதிகமான அபராதமும் அல்லது இரண்டு மற்றும் ஐந்து வருடங்களுக்கு இடையிலான சிறைத் தண்டனையும் அல்லது இரண்டு தண்டனைகளையும் நியமிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
tags :- Leopard killed kilinochchi Wildlife Department Response Action
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட தமிழர்கள்!!
- கிளிநொச்சியில் மீண்டும் சிறுத்தை; 10 பேர் காயம்; அடித்துக்கொன்ற பொதுமக்கள்
- பிரபஞ்ச உலக அழகிப் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாட்டு நங்கை!
- கொழும்பு விபத்தில் காதலன் உயிரிழந்தது தெரியாமல் காதலி செய்த காரியம்
- விமல் வீரவன்சவுக்கு புலி வேண்டும் – தென்பகுதி மக்களை ஏமாற்றவும் வேண்டும்
- கற்பனை செய்ய முடியாதளவுக்கு பாரிய குற்றங்களை இலங்கை செய்துள்ளது
- அமெரிக்கா விலகியதால் இலங்கைக்கு சாதகமாக எதுவும் இல்லை – சுமந்திரன்
- சீனா ஆட்டத்தை ஆரம்பித்தது – இலங்கைக்கு முதல் அதிர்ச்சி வைத்தியம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com