“ஆண்களின் திருமண வயதில் மாற்றம் கொண்டுவர வேண்டும்” என மத்திய அரசிடம் பரிந்துரைசெய்துள்ளது சட்ட கமிஷன்.legal commission recommends reduce age men-18
நாட்டில், பெண்களின் திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் உள்ளது. இந்த முறையில் மாற்றம் கொண்டு வர சட்ட கமிஷன், மத்திய அரசிடம் பரிந்துரைசெய்துள்ளது.
அதாவது, ஆண்களின் திருமண வயதை 21-ல் இருந்து 18 ஆக க்குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியுள்ளது.
குடும்ப சிவில் சட்டங்களில் சீர்திருத்தம் செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு சட்ட கமிஷன் அனுப்பிய ஆலோசனைப் பரிந்துரையில், ` 18 வயது என்பது உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட வயதாகும்.
18 வயது நிரம்பிய குடிமக்கள் தங்களது அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் மாபெரும் பொறுப்பில் இருக்கின்றனர்.
இந்த நிலையில், அவர்களுக்குத் தங்களின் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் உள்ளது.
அதனால், பெரியவர் சிறியவர் என ஆண்-பெண் திருமண வயதில் எந்த ஒரு வேறுபாடும் இருக்கவேண்டிய அவசியமில்லை.
மேலும், திருமண வயதை நிர்ணயிப்பதில் பாலின அடிப்படையிலான முரண்பாடு உள்ளது. கணவரைவிட மனைவியின் வயது குறைந்ததாகவே இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையை மாற்றவும் இந்தச் சட்ட திருத்தம் உதவும்.
வித்தியாசங்கள் அகற்றப்பட வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்து திருமணச் சட்டம் மற்றும் இஸ்லாமிய சட்டம் ஆகியவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- செம்பூர் – வதாலா இடையிலான மோனோ ரயில் சேவை தொடக்கம்
- நீட் போராளி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று
- மதுரையில் பிரம்மாண்டமான 13-வது புத்தகத் திருவிழா
- தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
- பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும் பிணவறை ஊழியர் – சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ
- பசுமை வெளிபூங்காவில் துள்ளிக்குதித்து விளையாடிய முதல்வர் பழனிசாமி
- கமல்ஹாசனுக்கு பயம் : தேர்தலில் அவர் போட்டியிடப்போவதில்லை – ஜெயக்குமார்
- ஈரோடு மாவட்டத்தில் 100 சதவிகிதம் மின் இணைப்பு வழங்கல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
- நான் ‘ஆச்சாரமான பிராமணர்’ மல்லையா : பிராமணர் சங்கத்தினர் கொதிப்பு
- ஆட்களை வளைக்கும் அழகிரி – அழகிரியை வளைக்கும் ஸ்டாலின் : கலைக்கட்டும் திமுக அரசியல்
- ஸ்டாலின் திமுக தலைவரானது மிகப்பெரிய சாதனை – சீமான் கிண்டல்
- திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒட்டிக்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்
- அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் அறிவாள், கத்தியுடன் அட்டகாசம் – மக்கள் அதிர்ச்சி (காணொளி)