23 ஆம் காணாமல் போனவர் நேற்றைய தினம்….. குளத்திலிருந்து….!

0
508
male body rescued Kalgavala Kalawewa National Park Anuradhapura

கிளிநொச்சி, புன்னைநிராவி பகுதியில் உள்ள குளம் ஒன்றிலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். last twenty third missing young men recovered body kilinochi

புன்னைநிராவி 26 ஆம் வாய்க்காலைச் சேர்ந்த 31 வயதான சுபாஸ் என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு நேற்று பிற்பகல் தர்மபுரம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 23 ஆம் திகதியில் இருந்து காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த குறித்த இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் முன்னிலையில் தர்மபுரம் பொலிஸார் மற்றும் கிளிநொச்சி குற்றத் தடகவியல் பொலிஸார் இணைந்து மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
last twenty third missing young men recovered body kilinochi

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites