நாட்டின் புதிய பாதுகாப்புச் செயலராக கோத்தாபய ராஜபக்ச அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளார் என்று, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. Kota security secretary again
பாதுகாப்புச் செயலராக உள்ள கபில வைத்யரத்னவுக்குப் பதிலாகவே கோத்தாபய ராஜபக்ச நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பாக கோத்தாபய ராஜபக்ச நேற்று பொலிஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதேவேளை, புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு அனைத்துலக சமூகம், ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கோத்தாபய ராஜபக்ச நேற்று முன்தினம் கோரிக்கை விடுத்திருந்தார்.
“மகிந்த ராஜபக்ச ஆட்சி தோற்கடிக்கப்பட்ட பின்னர், இன்னொருவருக்கு அனைத்துலக சமூகம் ஆதரவு அளித்த பின்னர், நாட்டில் என்ன நடந்தது என்று அவர்களுக்குத் தெரியும். எனவே, நாட்டைமோசமடையச் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்று அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்குமாறு கோருகிறேன். அவரால் மாத்திரமே, நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்த முடியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
tags :- Kota security secretary again
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
சுகாதார அமைச்சு செயலகத்துக்கு சீல் – ஜனாதிபதியின் அதிகாரிகள் அதிரடி
ஜனாதிபதிக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணை?
மகிந்தவின் மீள் வருகை குறித்து சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்ட கருத்து
கொலை சதியில் பொன்சேகாவுக்கு தொடர்பு! மைத்திரி தெரிவித்த உண்மை!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை