எம்.எல்.ஏ. கருணாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (Karunas MLA admitted Vadapalani Hospital)
முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரான கருணாஸ், சட்டசபை தேர்தலில் திருவாடானை தொகுதியில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
அண்மையில் தனது அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சரையும் பொலிஸ் உயரதிகாரியையும் அவதூறாக பேசியது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரதத்தை அடுத்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கருணாஸிற்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதனால் உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு தற்போது, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
முதலமைச்சருக்கு எதிராக கருணாஸ் தொடர்ந்து பேசி வருவது கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல் என்றும் அ.தி.மு.க கருதி வருகின்ற அதேவேளை, இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டுக்கு நல்லதல்ல
- பிரதமர் வாய்ப்பை உதறித் தள்ளினார் கருணாநிதி; ப.சிதம்பரம்
- சபரிமலை அனுமதி விவகாரம் பெண் சமூக ஆர்வலருக்கு கொலை எச்சரிக்கை
- திருச்சியில் தாயின் சலடம் மீது அகோரி நடத்திய விசித்திர பூஜை
- போதைப் பொருள் கும்பலை எதிர்த்த நபர் சுட்டுக்கொலை; வைரலாகும் காணொளி
- விவசாயிகளுக்கும் அதிரடிப்படையினருக்கும் வாக்குவாதம்; டெல்லி எல்லையில் பதற்றம்
- ஹைட்ரோகார்பன் திட்டத்தால் வரலாறு காணாத கிளர்ச்சி வெடிக்கும்
- வடமாநில விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை
- பாஜக விவசாயிகளை கொடூரமாக தாக்குகின்றது; ராகுல் காந்தி கடும் விமர்சனம்
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Karunas MLA admitted Vadapalani Hospital