கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.Karnataka Chief Minister Kozhikode’s wife contested Ramnagar
மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமாரசாமி முதல்வராகவும், காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஷ்வரா துணை முதல்வராகவும் உள்ளனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ராம்நகர் மற்றும் சென்னப்பட்டனா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட குமாரசாமி, இரண்டிலும் வெற்றிபெற்றார்.
பின்னர் அவர் சென்னப்பட்டனா தொகுதியை தக்கவைத்துக் கொண்டு ராம்நகர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில், ராம்நகர் தொகுதியின் இடைத்தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது.
அந்தத் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக குமாரசாமி தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
கட்சியின் பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியை களத்தில் இறக்க முடிவு செய்யப்பட்டது.
ராம்நகர் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் சார்பில் அனிதா போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பாலியல் அவதூறுக்கு காலம் உண்மையை சொல்லும்; வைரமுத்து
- நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது
- உத்தரப் பிரதேசத்தில் புகையிரதம் தடம்புரண்டு விபத்து; 05 பேர் பலி
- ஊழல் செய்து காங்கிரஸ் கட்சி நாட்டை சீர்குலைத்துவிட்டது; நிர்மலா சீதாராமன்
- நிதின் கட்காரி தொலைகாட்சி பேட்டி; ராகுல்காந்தி ஏளனம்
- நக்கீரனை சந்திக்க அனுமதி மறுப்பு; வைகோ தர்ணா போராட்டம்
- மத்திய பிரதேசத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும்; கருத்துக்கணிப்பில் தகவல்
- நக்கீரன் பத்திரிகையை முடக்க முயற்சி; நக்கீரன் கோபால்
- சபரிமலை வழக்கு; அவசர வழக்காக விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
- சத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் விபத்து; 06 தொழிலாளர்கள் பலி
- சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; பொதுமக்கள் மீது பொலிஸார் தடியடி