(Kaala movie banned karnataka state)
“காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனுஷ் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
அதாவது, பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ”காலா” படம் ஜூன் மாதம் 7ம் திகதி ரிலீஸாக உள்ளது. இப் படத்தின் புதிய ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் காலாவுக்கு கர்நாடகாவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
கன்னடர்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் ரஜினியின் ”காலா” படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கன்னட கூட்டமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.
ஆனால் இந்த வாட்டாள் சும்மா சும்மா போராட்டம் நடத்துவேன் என்று அறிவிப்பார் என்று மக்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் காலாவுக்கு நிஜமாகவே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ”காலா” படம் கர்நாடகாவில் வெளியாகாது. காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கூடாது என்று மாநிலம் முழுவதிலும் இருந்து கோரிக்கைகள் வந்தது. இதையடுத்து பட விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
நிலைமை குறித்து ஆய்வு செய்த பிறகு படத்தை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று அஞ்சப்படுவதால் இந்த முடிவு என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்து தெரிவித்துள்ளார்.
மேலும், காலாவுக்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது ரஜினி ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது.
இது குறித்து காலா பட தயாரிப்பாளர் தனுஷ் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
<MOST RELATED CINEMA NEWS>>
* இணையத்தில் வைரலாகும் “காலா” பட டிரைலர்..!
* ஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..!
* ஜெமினி கணேசன் ஆவணப்படம் : சாவித்திரிக்கு எதிரான காட்சிகளா..!
* தோனி நாட்டின் பிரதமராக மாறினால்..? : விக்னேன் சிவனின் பரபரப்பு டுவீட்..!
* சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்து முடித்த அஜித்..!
* ஓலா வாடகைக்காரில் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்..!
* கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடும் வயதான நடிகை..!
* மெர்சலுக்கு கிடைத்த பெருமை தற்போது காலா படத்துக்கும்..!
* எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாலும் பயன் இல்லை : அனுஷ்கா பகீர் பேட்டி..!
Tags :-Kaala movie banned karnataka state
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-