நாற்காலியுடன் வெளியேறிய ஜஸ்டின் ட்ரூடோ: வைரலாகும் பிரியாவிடை காட்சி

0
48

கனடா நாடாளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி ஜஸ்டின் ட்ரூடோ வெளியேறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மக்களின் செல்வாக்கை இழந்ததால் கட்சியின் ஒரு பிரிவினர் நெருக்கடியைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார்.

கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ தொடருவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த பல கட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து கட்சியின் தலைவராக மார்க் கார்னி நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்த சில நாட்களில் மார்க் கார்னி பிரதமராகப் பதவியேற்க உள்ள நிலையில் இன்று புதிய பிரதமராகப் பதவியேற்க உள்ள மார்க் கார்னியை ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்துள்ளார்.

தனது பதவிக்காலம் முடிவடைவதால் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி வெளியேறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.