தமிழ் மக்கள் மீதான பயத்தினால் நல்லாட்சி நிச்சயம் இதை செய்யும்!

0
540

வடக்கு மக்கள் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீதுள்ள பயத்தினால், அரசாங்கம் வடக்கு மாகாணசபை தேர்தலை உரிய நேரத்தில் நிச்சயமாக நடத்தும் என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். Joint Opposition Party Says Maithripala Sirisena Government Fear Tamil People

வடமத்திய, கிழக்கு, மற்றும் சப்பிரகமுவ மாகாணசபைகள் கடந்த 10 மாதங்களாக செயற்படாமல் இருப்பதாகவும் சந்திரசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த மாகாண சபைகளின் பதவிக்காலம் காலாவதியாகியுள்ளமையால் முதலமைச்சர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளதாகவும் சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த மாகாண சபைகளுக்குட்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற வீதிப்பிரச்சினை, சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகள் தொடர்பில், மக்கள் எவரிடம் சென்று முறையிடுவது என்றும் தெரியாமல் குழம்பிப் போயுள்ளதாகவும் சந்திரசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகளின் பதவிக்காலமும் முடிவடைகின்றது.

இன்னும் ஓரிரு மாதங்களில் நாட்டிலுள்ள 9 மாகாணசபைகளில் 6 மாகாணசபைகள் முற்றாக செயலிழக்கவுள்ள நிலையில் தமிழ் மக்கள் மீதுள்ள பயத்தின் காரணமாக நல்லாட்சி அரசாங்கம் வடக்கு மாகாணசபை தேர்தலை உரிய நேரத்தில் நிச்சயமாக நடத்தும் என எஸ்.எம்.சந்திரசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites