சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(jayantha-wickrama)
இந்தப் படுகொலை வழக்கில் போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டால், முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவார் என்று, கூறப்பட்டுள்ளது.
அரச சட்டத்தரணி ஜனக பண்டார நேற்று முன்தினம் கல்கிசை நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
“அந்த நேரத்தில் அவருக்கு எதிராக சாட்சியங்கள் இல்லாததால், ஜயந்த விக்கிரமரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவுக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனினும், ஜயந்த விக்கிரமரத்னவுக்கு எதிராக போதுமான ஆதாரங்களை விசாரணை அதிகாரிகள் திரட்டினால், அவரது கைது தவிர்க்க முடியாததாக இருக்கும்” என்றும் அரசதரப்பு சட்டத்தரணி ஜனக பண்டார குறிப்பிட்டுள்ளார்.
tags :- jayantha-wickrama
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஹிந்த குடும்பத்திற்கு எதிரான விசேட உயர் நீதிமன்றம் ஜூலையில் விசாரணைகளை ஆரம்பிக்கும்
- 67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி!!
- வடக்குமாகாணப் பிரதம செயலாளரின் மனு விசாரணை நாளை.!!
- புங்குடுதீவில் கரை ஒதுங்கியுள்ள இரு சடலங்கள்
- மஸ்தானை வைத்து இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா? : ஜனாதிபதியிடம் மனோ கேள்வி
- சிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சி பீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் அவர்களை ஏமாற்றி வருகிறது!!
- யாழில் திடீரென கைது செய்யப்பட்ட 15 பேர்!
- முதிர்ச்சி பெற்ற ஜனநாயகமே இது- அமைச்சர் ஹரின்
- கோட்டாபயவின் சீனப் பயணம்; அதுல் கேஷாப் கேள்வி
- ஒன்பது வருடங்களாக சுவாசக் குழாயில் இரும்புடன் வாழ்ந்த யாழ் இளைஞன்!
- கொழும்பில் இடம்பெற்ற சோகச் சம்பவம்; இளைஞன் பலி
- காங்கேசன்துறைக் கடலில் காணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….?