ஜம்மு காஷ்மீரில் இரு ஆயுததாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் பலி

0
632
Jammu Kashmir encounter Two militants neutralised killed India Tamil News

ஜம்மு காஷ்மீரில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 2 ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஒரு படையினர் உயிரிழந்துள்ளார். (Jammu Kashmir encounter Two militants neutralised killed India Tamil News)

ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் உள்ள பாசல்போரா என்ற இடத்தில் ஆயுததாரிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, பாதுகாப்பு படையினரும் உள்ளூர் பொலிஸாரும் இணைந்து ஆயுததாரிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, மறைந்திருந்த ஆயுததாரிகள், தானியங்கி துப்பாக்கிகள் மூலம் பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டதுடன், பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த சண்டையில் 2 ஆயுததாரிகள் கொல்லப்பட்டதுடன், பாதுகாப்பு படை தரப்பில் ஒரு வீரர் உயிரிழந்ததைத் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதால் பதற்றமான சூழல் நிலவுகின்றது.

ஆயுததாரிகள் தொடர்பான வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் சோபோர் பகுதியில் இன்று கையடக்கத் தொலைபேசி, இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Jammu Kashmir encounter Two militants neutralised killed India Tamil News