ஊடகவியலாளர்களுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் கொலை அச்சுறுத்தலா?

0
718
minimum cut out marks released examination department

(Jaffna University Students Threatened North Journalists Issue)

கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் போது பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் பல விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று நெற்றிக்கண் செய்திப்பிரிவு செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தமை நினைவிருக்கும்.

பல தரப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் மாணவர்களின் செயற்பாடு தொடர்பில் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அதன் உண்மை தன்மைகள் பல காரணிகளில் தங்கி இருப்பதை மறுக்கமுடியாது.

ஆனால் இந்த விடயங்களை தாண்டி சில தரப்புகள் பல்கலைக்கழக மாணவர்களை பிழையாக வழிநடாத்துகின்றார்களா என்னும் சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.

காரணம், இந்த விடயம் தொடர்பில் விமர்சனங்களை வழங்கிய ஊடகவியலாளர்கள் சிலர் பல்கலைக்கழக மாணவர்கள் என்று கூறப்படும் சிலர் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

உண்மையில் இது பல்கலைக்கழக மாணவர்களா அல்லது அவர்களின் பெயரில் செயட்படும் சக்திகளின் சதி வேலையா என்பது இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை.

என்றாலும் இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களின் தலைமை சரியான கவனம் எடுக்க வேண்டும். இல்லையென்றால் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் பல சதி வேலைகள் முன்னெடுக்கப்படலாம்.

நினைவேந்தல் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுங்கமைப்பில் குறைகள் இருக்கலாம் , ஆனால் அவர்களின் தலையீடு சிறுபிள்ளை தனமானது என்னும் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட இயலாது.

ஆயுத போராட்ட காலத்திலும் சரி அதன் பின்னரான காலத்திலும் சரி யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவும் பங்களிப்பும் இன்றுவரை பேசப்படும் பொருளாகவே உள்ளது.

அந்த பெருமைக்கு இழுக்கு ஏற்படாதவாறு நடக்கவேண்டியது அனைத்து தரப்புகளினதும் கடமையாகும்.

ஏனைய செய்திகள்

பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

பிற தளங்கள்

Tamilworldnews.com

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு