யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இரவு வேளைகளில் மோட்டார் சைக்கிள்களில் நடமாடும் வாள்வெட்டுக் குழுவினர் பொதுமக்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களைக் குறிவைத்து, கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றமை மக்களை பெரிதும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது. (jaffna sword attack group target foreigners Continuing robbery)
குறிப்பாக எட்டு அல்லது ஏழு பேர் கொண்ட குழு இரவு நேரங்களில் பொதுமக்களின் வீடுகளுக்கு உட்புகுந்து அங்குள்ளவர்களுக்கு கொலை எச்சரிக்கை விடுத்து, பணம் மற்றும் நகை என்பவற்றை கொள்ளையடிப்பதுடன், வீட்டிலிருக்கும் பொருட்களையும் சேதப்படுத்திச் செல்கின்றனர்.
இதனால் வீடுகளுக்குள் இருப்பதற்கே பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்து வருவதாகவும் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களின் வீடுகளைக் குறிவைத்தே இவ்வாறு கொள்ளை நடவடிக்கையில் வாள்வெட்டுக் குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்றிரவு மாத்திரம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம் தொடர்ந்துள்ளது.
மோட்டார் சைக்களில் சென்ற வாள்வெட்டுக் குழுவினர் கொக்குவில் மற்றும் சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதிகளிலுள்ள வீடுகளுக்குள் உட்புகுந்துள்ளதாகவும் முகங்களை மூடிமறைத்தவாறு, இலக்கத் தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில் சென்று தாக்குதல்களை சில நிமிட நேரங்களில் நடத்திவிட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாள்வெட்டுக்குழு உறுப்பினர் என தாம் சந்தேகிக்கும் ஒருவரது உறவினரின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்தத் தாக்குதல் சம்பவங்கள் 4 மோட்டார் சைக்களில் சென்ற 8 பேர் குழுவினால் நேற்றிரவு 7 மணிக்கும் 7.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடத்தப்பட்டுள்ளது.
சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியிலுள்ள வீடுகளுக்குள் நுழைந்த கொள்ளைக் கும்பல், பொதுமக்களின் கூக்குரல் சத்தத்தை அடுத்து தப்பித்துச் சென்றுள்ளதாகவும் கொக்குவில் பிரம்படி ஒழுங்கை, கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகிலுள்ள புதுவீதி, ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொருக்கியும் வீட்டினுள் புகுந்து தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட வீட்டுத் தளபாடங்களையும் சேதமாக்கியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக முகத்தை மூடி வாள்களுடன் செல்லும் குழுக்களால் வீடுகள் தாக்கப்பட்டு வருகின்றது. வர்த்தக நிலையங்கள் தாக்கப்படுகின்றன.
வர்த்தக நிலைய உரிமையாளர்கள் அச்சுறுத்தப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்படுகின்றது. தொடர்ந்து இடம்பெறும் இந்தச் சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
வடக்கு வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர், பொலிஸ்மா அதிபர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பின்னரும் அவை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றமை தற்பொழுதைய அரசாங்கத்தின் மீது பொதுமக்களிடையே நம்பிக்கையின்மையை தோற்றுவித்துள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வடமராட்சியில் மீனவரின் படகை தீ வைத்த விஷமிகள்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- கிழக்கு மக்களுக்கு ரணிலிடமிருந்து இனிப்பான செய்தி!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; jaffna sword attack group target foreigners Continuing robbery