யாழ். பொலிஸாருக்கு விடுமுறைகள் இரத்து; அரசாங்கம் அதிரடி முடிவு

0
789
Two police constables suspended connection bribe foreign citizen

யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வருகின்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து பொலிஸாருக்கான விடுமுறைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. (Jaffna police leave canceled government decided Action)

கடந்த சில நாட்களாக குடாநாட்டின் பல இடங்களிலும் வாள்வெட்டுச் சம்பவங்கள், பாலியல் துஷ்பிரயோகம், கொலை போன்ற வன்முறைகள் இடம்பெற்றிருக்கின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் பொலிஸார் மீது, பல்வேறு தரப்பினர்களும் குற்றஞ்சாட்டியிருந்ததுடன், இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, ஆவா குழுவின் அட்டகாசங்கள் மற்றும் குற்றச் செயல்கள் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸாரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை யாழ். மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அனைத்துப் பொலிஸாருக்குமான விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Jaffna police leave canceled government decided Action