டெல்லி அமைச்சரின் வீட்டில் சோதனை; 37 இலட்சம் ரூபாய் பறிமுதல்

0
606
IT Department Seizes Cash Jewellery Worth Rs 2 Crore

டெல்லி அமைச்சர் கைலாஷ் கலாட்க்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 37 இலட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. (IT Department Seizes Cash Jewellery Worth Rs 2 Crore)

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் கைலாஷ் கலோட் போக்குவரத்து, வருவாய், தொழில்நுட்பம், நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சராகவுள்ளார்.

இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த முறைப்பாட்டின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைலாஷ் கலோடுக்கு சொந்தமான 16 இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது 37 இலட்சம் ரூபாய் பணம், 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் 28 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், கைலாஷ் மற்றும் அவரது மனைவியின் வங்கி லொக்கரில் இருந்து கிடைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்த சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆம்ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; IT Department Seizes Cash Jewellery Worth Rs 2 Crore