Home Sports இஸ்டான்புல் ஓபனில் மெரின் சிலிச் அதிர்ச்சித் தோல்வி!

இஸ்டான்புல் ஓபனில் மெரின் சிலிச் அதிர்ச்சித் தோல்வி!

2
இஸ்டான்புல் ஓபனில் மெரின் சிலிச் அதிர்ச்சித் தோல்வி!

(istanbul open 2018 Marin Cilic news Tamil)

துருக்கியின் – இஸ்தான்புல் நகரில் ஆரம்பமாகியுள்ள இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் குரோட்டியாவின் முன்னணி வீரர் மெரின் சிலிச் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார்.

இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ் தொடர் ஏப்ரல் 30ம் திகதி ஆரம்பமாகி மே 6ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டித் தொடரின் இரண்டாவது சுற்றில் மெரின் சிலிச், துன்சியாவின் மலெக் ஜெசூரியை எதிர்கொண்டு விளையாடினார்.

போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெரின் சிலிச் தடுமாற்றாத்துடன், ஜெசூரியை எதிர்கொண்டார். எனினும் அபாரமாக ஆடிய ஜெசூரி 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று, சிலிச்சை வெளியேற்றினார்.

ஜெசூரி முதல் செட்டை 6-4 என கைப்பற்றியதுடன், இரண்டாவது செட்டை 6-2 என கைப்பற்றி வெற்றிபெற்றார்.

ஜெசூரி காலிறுதியில் செக்குடியரசின் ஜிரி வெஸ்லியை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here