9 ஐ.எஸ். தீவிரவாதிகளை தூக்கிலிட்ட ஈரான்

0
25

9 ஐ.எஸ். தீவிரவாதிகளை ஈரான் இன்று தூக்கிலிட்டதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. 2018 தாக்குதலுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய அரசு குழுவின் ஒன்பது ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான்  தெரிவித்துள்ளது.

ஈரானிய நீதித்துறையின் மிசான் செய்தி நிறுவனம் செவ்வாயன்று (10) மரண தண்டனையை அறிவித்தது. மூன்று ஈரானிய படையினரை கொன்ற ஈரானின் துணை இராணுவப் புரட்சிகர காவல்படையுடன் மோதலில் ஈடுபட்ட பின்னர் தீவிரவாதிகள் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் இன்று ஈரான் அவர்களை தூக்கிட்டதாகவும் கூறப்படுகின்றது.