அடுத்த பிரதமர் தொடர்பில் ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல்!

0
396

இலங்கை அரசியலமைப்பின் படி, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவர்தான் பிரதமர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு கங்காராம விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தனது கட்சியில் அவர் மாத்திரம் இருப்பதால் பிரதமரை தெரிவு செய்ய முடியாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நேற்று நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்த ஜனாதிபதி பாதுகாப்பு படை உறுப்பினர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு விடயங்களில் கடமையாற்றிய பொலிஸ், ஆயுதப்படை உள்ளிட்ட பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்தார்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.