இந்தோனேஷியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 189 பேரி பலியான நிலையில் அதில் பயணிக்க இருந்த அரசு அதிகாரி ஒருவர் விமானத்தை போக்குவரத்து நெரிசல் காரணமாக தவறவிட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். Indonesian air crash One survived fortunately last time
இந்தோனேசியா ஜகார்த்தாவில் இருந்து நேற்று காலை 6.20 மணிக்கு லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் JT610 பயணிகள் விமானம் 6 பணிப்பெண்கள், 2 விமான ஓட்டிகளுடன் சேர்த்து 189 பேருடன் பங்கல் பினாங் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்டு சென்ற நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த 189 பேரும் பலியாகினர். இறந்தவர்களின் உடல்களை மீட்க மீட்புத் துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விபத்துள்ளான விமானத்தை தவறவிட்ட இந்தோனேசிய நிதி அமைச்சக அதிகாரியான சோனி செடியாவான் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர் இந்த விமானத்தில் தான் நான் பயணம் செய்திருக்க வேண்டியது. இருப்பினும் வீட்டிலிருந்து காரில் வரும் போது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் விமானத்தை பிடிக்க முடியவில்லை. நல்ல வேளையாக விமானத்தை தவறவிட்டதால் பெரும் விபத்திலிருந்து தப்பித்துள்ளேன் என படபடப்புடன் அவர் தெரிவித்திருக்கிறார்.
tags :- Indonesian air crash One survived fortunately last time
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- காற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு
- நியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு
- இந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை
- பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை
- முச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்!!
- ஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி
- இந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்
- பெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்
எமது ஏனைய தளங்கள்