இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து லயன் ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை 6.20 மணியளவில் பங்கல் பினாங்கு தீவுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்டு நடுவானில் பறக்கத் தொடங்கிய 13வது நிமிடத்தில், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. Indonesia magic plane 188 people crashed sea shocked
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தேடும் பணியை தொடங்கினர். விமானத்தில் பயணிகள், விமான ஊழியர்கள் என மொத்தம் 188 பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், லயன் ஏர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது தெரியவந்ததும், சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் மற்றும் அதிகாரிகள் விரைந்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களை தேடி வருவதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் இருக்கைகள் உள்ளிட்ட பாகங்கள் ஜாவா கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
tags ;- Indonesia magic plane 188 people crashed sea shocked
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- பெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்
- உலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு
- உலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி
- அமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது
- முன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்!
- ஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்
- ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்
- பத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்
எமது ஏனைய தளங்கள்