கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கனடாவில் நடந்து முடிந்த தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் லிபரல் கட்சியின் தலைவரான மார்க் கார்னி அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார்.
கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த மெலானி ஜோலிக்கு பதிலாக அனிதா ஆனந்துக்கு அந்த பதவி கையளிக்கப்பட்டுள்ளது.
அனிதா புலம்பெயர்ந்தோரின் மகள் ஆவார். அனிதாவின் பெற்றோர் 1960களின் துவக்கத்தில் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆவர். அனிதாவின் தாய் சரோஜ் D ராம் பஞ்சாபைச் சேர்ந்தவர். தந்தை SV ஆனந்த் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல பட்டப்படிப்புகளை முடித்த அனிதா, சட்டம், கல்வி மற்றும் பொது சேவை துறைகளில் வலுவான தடம் பதித்தவர் ஆவார். அனிதாவின் கணவரான ஜான் (John Knowlton) ஒரு சட்டத்தரணியாக இருப்பதுடன் வணிக நிர்வாகியாகவும் உள்ளார். தம்பதியருக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
அனிதா ஏற்கனவே தேசிய பாதுகாப்புத்துறை, போக்குவரத்து, உள்நாட்டு வர்த்தகம் முதலான துறைகளில் அமைச்சராகவும், கருவூல வாரியத் தலைவராகவும் பதவிகள் வகித்தவர் ஆவார்.
