இந்திய சினிமா நடிகர்களின் விவாகரத்தும் அதற்கான காரணங்களும்

0
1105
Indian actress divorce reason latest gossip

(Indian actress divorce reason latest gossip )

இன்றைய சமூகத்தில்விவாகரத்து என்பது எல்லோருக்கும் ஒரு சர்வ சாதாரணமான விடயமாக மாறி விட்டது . குடும்பத்தில் பிரச்சனை என்றால் உடனே விவாகரத்து செய்து விட்டு இன்னொரு திருமணம் தான் .எல்லோருக்கும் விவாகரத்து  சர்வ சாதரணமாகி விட்டது .

இதில் பிரபலங்கள் தங்கள் முதல் மனைவி / கணவரை விவாகரத்து செய்ய காரணமாக அறியப்படுபவை

சஞ்சய் தத்!

 

சஞ்சய் தத்தின் முதல் மனைவி ரியா பிள்ளை. இவர்கள் இருவரும் கடந்த 1998ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். திருமணமான சில வருடங்களிலேயே இவர்கள் இருவரும் பிரிந்தனர். இதற்கு காரணம் ரியா பிள்ளைக்கும், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயசிற்கும் இருந்த தொடர்பு தான் என்று கூறப்படுகிறது. 2005ம் ஆண்டு ரியா – சஞ்சய் விவாகரத்து செய்துக் கொண்டனர். அதன் பின்னர் ரியா லியாண்டருடன் லீவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இவர்கள் இருவருக்கும் அயான என்ற குழந்தை இருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டு தன்னை கொடுமைப் படுத்துவதாக லியாண்டர் மற்றும் அவரது தந்தை மீது ரியா புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்ஹான் அக்தர்!

 

அதுனா பாபானி என்பவரை 2000ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார் பர்ஹான் அக்தர். இவர்கள் இருவரும் மூன்று ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். 16 ஆண்டுகள் இல்லற உறவில் நீடித்த இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இவர்கள் இருவரும் மன மாற்றத்தின் காரணமாக விவாகரத்து செய்துக் கொள்வதாக கடந்த 2016 ஜனவரி மாதம் வெளிப்படையாக அறிவித்தனர்.

சயப் அலிகான்

 

அம்ரிதா சிங்கை திருமணம் செய்துக் கொண்டார். அம்ரிதா சிங் சயப் அலிகானை விட 12 வயது மூத்தவர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளும் பெற்றனர். ஆனால், திடீரென சயப் அலிகானுக்கும் இத்தாலியன் மாடல் அழகி ரோசா கடலானோ என்பவருக்கும் ஏற்பட்ட தொடர்பு காரணமாக இவர்கள் பிரிய நேர்ந்தது. ஆனால், ரோசாவிடமும் சயப் அலிகான் தனது முதல் திருமணம் பற்றி பொய் கூறியதாக அறியப்படுகிறது. பிறகு, இவர் கரீன கபூரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.

அமீர் கான்

ஹ்ரிதிக் ரோஷன் - சுசேன் இ

 

ரீனாவை 1986ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் 16 ஆண்டுகால இல்லறத பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து அமீர் கான் கிரன் ராவை திருமணம் செய்துக் கொண்டார்.

ஹ்ரிதிக் ரோஷன்!

 

ஹ்ரிதிக் ரோஷன் – சுசேன் இந்தி சினிமாவின் புகழ்பெற்ற காதல் ஜோடி. காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இவர்களுக்கு இரண்டு மகன்கள். 14 வருட இல்லற வாழ்க்கையை இவர்கள் கடந்த 2014ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வந்தனர். இதற்கு காரணம் ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் கங்கனா ரனாவத் இடையே இருந்த தொடர்பு தான் என்று கூறப்படுகிறது. ஆனால், ஹ்ரிதிக் – கங்கனா இருவருமே ஊடகங்கள் வாயிலாக நிறைய சண்டையிட்டுக் கொண்டார்கள். மாறி, மாறி ஒருவர் மீது ஒரு பழி போட்டுக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விவாகரத்து ஆனாலுமே கூட ஹ்ரிதிக் – சுசேன் கான் சுமூகமான உறவில் இருந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மிதுன் சக்ரவர்த்தி – ஸ்ரீதேவி

 

திருமணம் செய்துக் கொண்டு ஒருசில ஆண்டுகள் தான் ஒன்றாக வாழ்ந்தனர். மிதுன் சக்ரவர்த்தி முதலாவது மனைவியை விவாகரத்து செய்யாமல் ஸ்ரீதேவியுடன் திருமணம் செய்துக் கொண்டதை தொடர்ந்து இவர்கள் பிரிந்ததாக கூறப்படுகிறது. இன்னும் சீலர் இவர்கள் பிரிந்ததன் காரணம் அறியப்படவில்லை என்றும் கூறுகிறார்கள்

தர்மேந்திரா

 

இந்தி சினிமா உலகின் முன்னணி நடிகர் தர்மேந்திரா. இவர் முதலாவதாக பிரகாஷ் கவுர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர் முதலாவது மனைவியை விவாகரத்து செய்யாமலே ஹேமா மாலினியை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.

கமல் ஹாசன்

 

முதலில் வாணி கணபதி எனும் பரதநாட்டிய கலைஞரை 1978ல் திருமணம் செய்துக் கொண்டார். ஆரம்பத்தில் நன்றாக பயணித்த இவர்களது இல்லற வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. இவர்கள் இருவருக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. பிறகு சரிகாவை திருமணம் செய்து கொண்டார் கமல் இவருக்கு ஷ்ருதி, அக்ஷரா என இரண்டு மகள்கள். முதல் மனைவியை இவர் விவாகரத்து செய்ய ஒரு நடிகையுடன் ஏற்பட்ட தொடர்பு தான் காரணம் என கூறப்பட்டது. இவரது இரண்டாவது மனைவி சரிகாவை விவாகரத்து செய்யவும் வேறு ஒரு நடிகையுடன் ஏற்பட்ட தொடர்பு தான் என்றும் கூறப்பட்டது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Indian actress divorce reason latest gossip