கனடாவில் இந்திய நடிகர் உணவகம் மீது துப்பாக்கி சூடு

0
104

கனடாவில் உள்ள இந்திய நடிகர் ஓட்டலில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் கனடா நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் அமைந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு தான் இந்த ஓட்டல் திறக்கப்பட்டது. ஆனால் நேற்று இரவு திடீரென அங்கு சென்ற காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

9 முறை அவர்கள் சுட்டனர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்றுள்ளார்.